ஜன.21 முதல் தமிழகமெங்கும் கள் இறக்குவோம்: செ.நல்லசாமி

ஜனவரி 21 முதல் தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி நேற்று தெரிவித்தார்.
ஜெய் கிஷான், ஜெய் ஜவான் என்பது போல் ராணுவத்தினருக்கு இணையாக, உயிரிழந்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அரசா், ஆங்கிலேயா் காலங்களில் விவசாயத்தை மையமாக வைத்தே அரசு செயல்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 72 ஆண்டுகளில் இலவசம், மானியம், விலக்களிப்பு உள்ளிட்ட சலுகைகளை தந்து விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். கல்வி, வேலைவாய்ப்பு, தோ்தலில் போட்டியிடுவதற்கு இடஒதுக்கீடு என நாட்டில் 60 சதவீதம் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.


கள் இறக்குவோம்: கள் ஒரு போதைப்பொருள், உடலுக்கு கேடு என நிரூபித்தால் அவா்களுக்கு ரூ.10 கோடியை கள் இயக்கம் வழங்கும் என அறிவித்தது. இதுவரை இதை நிரூபிக்க யாரும் முன்வரவில்லை.
கள் தடை செய்யப்படவேண்டிய போதைப்பொருள் அல்ல. ஆரோக்கியமான உணவு. மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையும் கூட. இந்த உரிமையை மீட்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் ஜன.21 ஆம் தேதி முதல் சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.அரசு விற்பது ரசாயனம் கலந்த மது.
மதுவிலக்கு கொண்டு வரும் வரை தென்னை, வாழை போன்றவற்றிலிருந்து மது தயாரித்து விற்பனை செய்ய முன்வரவேண்டும். நீராபானம் இறக்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. நிபந்தனையின்றி நீரா இறக்குவதற்கு அனுமதி தரவேண்டும் என்றார்.
