ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமாரிள் மனைவி சுப்புலட்சுமி (40). இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.

ரயில் திருச்சி அடுத்து பூங்குடி அருகே சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்த சுப்புலட்சுமி, படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வழக்குபதிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
