திருச்சி உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் மாற்றுத்திறனாளி பெண் வேட்பாளர் !

0
Business trichy

திருச்சி உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் மாற்றுத்திறனாளி பெண் வேட்பாளர் !

 

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளுக்கு வருகிற 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 9 வார்டுகளை உள்ளடக்கிய நாகமங்கலம் ஊராட்சியின் 1-வது வார்டில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

 

 

 

வடக்கு நாகமங்கலம், காந்தி நகர், சாமியார்பிள்ளைபட்டி ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் 516 ஓட்டுகள் உள்ளன.. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த வார்டில் உறுப்பினர் பதவிக்கு சாமியார்பிள்ளைபட்டியை சேர்ந்த வித்யா(வயது 30) என்ற பெண்ணும், காந்தி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான விஜயநிர்மலாவும்(38) போட்டியிடுகின்றனர். விஜய நிர்மலாவின் கணவரும் கண் பார்வையற்ற பட்டதாரியாவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் பார்வை கிடையாது. இந்த வார்டில் கடந்த முறை காந்தி நகரை சேர்ந்த சரவணன் என்ற கண் பார்வையற்றவர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது இந்த வார்டில் மாற்றுத் திறனாளி விஜயநிர்மலா போட்டியிடுகிறார்.

 

Half page

அடிப்படை வசதிகள் இல்லை

 

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கூறியதாவது:-

 

12-ம் வகுப்பு வரை பார்வையற்றோர் பள்ளியில் படித்துள்ள நான் கண் பார்வையற்ற பட்டதாரியான செல்வம் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் இருவரும் ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் ஆகிய பூஜை பொருட்களை மொத்தமாக வாங்கி திருச்சி மற்றும் வெளியூர்களுக்கு சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் ஊரான காந்தி நகருக்கு இதற்கு முன்பு இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் சரியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை.

 

குறிப்பாக கண்பார்வையற்ற நபர்கள் அதிகம் குடியிருக்கும் காந்தி நகர் பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்களில் ஒருவர் உள்ளாட்சி பிரதிநிதியாக வந்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்போடு 220 ஓட்டுகள் உள்ள கண் பார்வையற்றோர் குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பாக அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நிறுத்தியுள்ளனர். நான், நிச்சயம் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.