திருச்சியில் வரும் 26ம் தேதி வளைய சூரியகிரகணம்

0
Business trichy

சூரிய ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத் தான் கிரகணம் என்கிறோம். சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல் பூமியில் விழும்போது அது சூரியகிரகணம் ஆகும். இதேபோல்பூமியின் நிழல் முழு நிலவின் மீதுவிழுந்து மறைவது சந்திரகிரகணம் என அழைக்கிறோம்.

இதன்படி திருச்சியில் டிசம்பா் 26- ஆம் தேதி சூரியகிரகணம் நடைபெறுகிறது. இந்நிகழ்வு, தமிழகத்தில் காலை 8. 07 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11.16 மணி வரை நிகழ்கிறது. குறிப்பாக இந்த கிரகணம் வளைய வடிவக் கிரகணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒரு அரிய காட்சியைக் காணமுடியும்.

Rashinee album

இதனைவளைய சூரியகிரகணம் அல்லது கங்கண சூரியகிரகணம் என அழைக்கிறோம். இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. நுண்துளை கேமரா  அல்லது சூரியக்கண்ணாடிகள் கொண்டோ, காண வேண்டும்

Image

இந்த அரிய வான்நிகழ்வை பாதுகாப்பாக காண பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எல்.ஐ.சி காலனி ஆா்ச்சிஸ்ட் பள்ளி, நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

.இந்த வளைய வடிவ சூரியகிரகணம், இதற்கு முன் 2010 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று நிகழ்ந்தது. இதனையடுத்து வரும் 2034 ஆம் ஆண்டில்தான் இந்த வளைவடிவ கிரகணம் நடைபெறும். இதைக் காண பிரத்யேக கண்ணாடி அல்லது மேலே குறிப்பிட்டபடி காணலாம்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.