திருச்சியில் வயலில் விழுந்த மின் வயர் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி

0
1 full

திருச்சியில் வயலில் விழுந்த மின் வயர் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி

 

திருச்சி – திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருத்தமணி என்கிற ஆறுமுகம். இவருடைய மனைவி ஒப்பாயி (வயது 75). இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராமமூர்த்தி (50). விவசாயி. இவர்களுக்கு சொந்தமாக திருச்சி நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தனர்.

2 full

22.12.1019 பகல் 2.30 மணி அளவில் ராமமூர்த்தியின் மகன் குணசேகரன் (23) வயலில் உரம் தெளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென வயல்வெளிக்கு மேலே இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது. வயலில் தண்ணீர் தேங்கி இருந்ததால் குணசேகரன் மீது மின்சாரம் பாய்ந்தது.  இதில் அவர் துடித்துடித்தார். இதை கண்டு வரப்பில் நின்றிருந்த ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

3 பேர் பலி

மகனை காப்பாற்றுவதற்காக அவரும் வயலில் இறங்கி ஓடி வந்தார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மகனும், பேரனும் வயலில் மின்சாரம் பாய்ந்து துடிப்பதை கண்ட ஒப்பாயியும் வயலில் இறங்கினார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். வயலில் மின்கம்பி கிடப்பதை கண்டு யாரும் வயலுக்குள் இறங்கவில்லை. உடனடியாக அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் வயலில் இறங்கி மின் கம்பியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

உடலை கைப்பற்றி விசாரணை

தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.