சொத்துத் தகராறில், அக்காவை வெட்டிய தம்பி கைது

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சொத்துத் தகராறில், அக்காவை வெட்டிய தம்பி கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த விசாலட்சுமி (55). இவருக்கும் இவரது தம்பி நடராஜனுக்கும் (50) இடையே பல நாள்களாக சொத்துத் தகராறு இருந்து வந்தது.
கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக விசாலட்சுமியை நடராஜன் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த விசாலட்சுமி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிந்து நடராஜனை நேற்று கைது செய்தனர்.
