கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு

0
D1


திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை பர்மா காலனியை சேர்ந்தவர் சுயம்பிரகாசம் (70).  இவரது ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் காய்கறி பயிரிட்டு வந்துள்ளார்.

N2

இதன் அருகே 25 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணறு உள்ளது கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாழவந்தான்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த சுந்தராம்பாளின் (54) பசுமாடு தவறி கிணற்றில் விழுந்து இறந்தது. எங்கும் தேடியும் மாடு கிடைக்காத நிலையில் சுயம்பிரகாசதிற்கு சொந்தமான கிணற்றில் பசுமாடு விழுந்து இறந்து கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த வாழவந்தான் கோட்டை விஏஓ சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் விழுந்து இறந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையின் உதவியுடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.