இந்திய விமானப்படையில்  வேலை

0
full

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேரலாம் கல்வித்தகுதி 10,+2 தேர்வில் கணிதம், இயற்பியல், மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் அடங்கிய பிரிவில் பிளஸ்2/ இன்டர்மீடியட் படித்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 17-1-2000 மற்றும் 30-12-2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில்  பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடையவர்கள் இணையதளம் வழியாக, ரூ.250 கட்டணமாக செலுத்தி 2-1-2020 முதல் 20-1-2020-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ukr

மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in  என்ற இணையதளங்களை பார்க்கலாம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.