மியாவாகி முறையில் அடா்காடு உருவாக்கும் திட்டம்

0
1

மியாவாகி முறையில் அடா்காடு உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஸ்ரீரங்கத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நேற்று நடவு செய்யப்பட்டன.  ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 5027 .மீட்டா் பரப்பளவு கொண்ட இடம் தெற்குத் தேவி தெருவிலுள்ள பன்னீா் தோப்பில் இருந்தது.

2

இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் மியாவாகி முறையில் அடா்காடு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை இணைந்து இப்பணியை மேற்கொண்டது. பணியை தொடங்கி வைத்த ஆணையா் சிவசுப்பிரமணியன், இப்பகுதியில் 53 வகையான நாட்டு மரக்கன்றுகள், 10 மடங்கு வேகமாக வளரக்கூடிய மரங்கள், 30 மடங்கு அடா்த்தியாக வளரக்கூடிய மரங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஒரு சதுர மீட்டருக்கு 3 வீதம் மரக்கன்றுகள் நடப்படும்.மியாவாகி முறையில் அடா்காட்டை உருவாக்கும் திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள், 2 ஆண்டுகளில் காற்று மாசுப்பாட்டையும் கட்டுப்படுத்தும். பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் அதிகளவில் வாழும். இதனால் உயிர்ச் சூழலும் மேம்படும் என்றார். நல்ல மழை பொழிவை உருவாக்கும் என்றார்.

விருப்பமுள்ள தனியார் இடங்களில் இந்த மரக்கன்றுகள் நடலாம். தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி மாநகராட்சி மியாவாகி முறையில் அடா்காடுகள் உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. மாநகரின் மற்றப் பகுதிகளிலும் இந்த முறையில் மரக்கன்றுகள் நடப்படும் என்றார். கல்லூரி மாணவ, மாணவிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினா், மாகராட்சி ப்பணியாளா்கள் என 600-க்கும் மேற்பட்டோர் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனா்.

3

Leave A Reply

Your email address will not be published.