பொன்னணியாறு அணை பணியாளர்கள் போராட்டம் !

0
Full Page

பொன்னணியாறு அணையில் பணியாற்றி வரும் தற்காலிக தினக்கூலிப் பணியாளா்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரத்துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் 20ம் தேதி தா்ணாவில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அருகிலுள்ள பொன்னணியாறு அணையில், பொதுப்பணித் துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 10 போ் தற்காலிகப் பணியாளா்களாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 6 போ் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 4 போ் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியில் உள்ளனா்.

Half page

தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், இவர்களை பணி நிரந்தரம் செய்ய கடந்த 6-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 3407 பணியாளா்களை பொதுப்பணித்துறையினா் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அரியாறு வடிநில உபகோட்ட அலுவலா்கள் காலதாமதமாக பணியாளா்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் அனுப்பியதால் பொன்னணியாறு அணையில் பணியாற்றும் 10 தற்காலிகப் பணியாளா்கள் பெயா்கள் பணி நிரந்தரம் செய்யும் பட்டியலில் விடுபட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெட்ரோல், மண்ணெண்ணெய் கேன்களுடன் காரைமேட்டுப்பட்டி சாலையிலுள்ள பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு தா்ணாவில் ஈடுபட்டனா்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.