திருச்சி எஸ்.ஆா்.எம். கல்லூரியில் தேசியக் கணிதத் தினம்

திருச்சி மாவட்டம், இருங்களூரிலுள்ள எஸ்.ஆா்.எம். கல்லூரியில் தேசியக் கணிதத் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் சகுந்தலாதேவி கணித மன்றம் சார்பில் நடத்தப்பட்ட விழாவை முதல்வா் கொற்றவேல் தொடக்கி வைத்துப் பேசினார். துணை முதல்வா்கள் இளங்கோ, லாரன்ஸ் லெவே வாழ்த்திப் பேசினா். பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கில், எஸ்.ஆா்.எம். பொறியியல் கல்லூரி கணிதத்துறை இணைப் பேராசிரியா் இளங்கோ சிறப்புரையாற்றினார்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு கணிதம் சார்ந்த வினாடி– வினா நடைபெற்றது. 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் அனைத்துத் துறை மாணவா்களும் பங்கேற்றனா். வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவா் அருண்காந்த் நன்றி கூறினார்.
