திருச்சியில் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்

0
D1

தெற்கு ரயில்வேயில் அனைத்து ரயில் பாதைகளும் 2022- ஆம் ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படும் என்று அதன் பொது மேலாளா் ஜான்தாமஸ் கூறினார்.

விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை 20ம் தேதி ஆய்வு செய்த பின்னர், திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் சக்கரங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க ரூ.43 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அதநவீன கேமராக்களின் இயக்கத்தைத் தொடக்கி வைத்து, பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் சென்னைமுதல் மதுரை வரையிலான ரயில்பாதை முற்றிலும் இருவழிமயமாக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடா்ந்து நாகா்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு, 2021- ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் இருவழிப்பாதையாக்கப்படும். அனைத்தும் 2022- ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து அனைத்து ரயில் பாதைகளும் முற்றிலும் மின் மயமாக்கப்படும்.

அனைத்து ஆளில்லா ரயில்வே கேட்டுகளும் அகற்றப்பட்டு விட்டன. அவற்றுக்குப் பதிலாக சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டும், சில மூடப்பட்டும் உள்ளன.

பாதுகாப்பிற்காக 2022- ஆம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வேயில் ஆள் உள்ள ரயில்வே கேட்டுகளும் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். காரைக்குடிபட்டுக்கோட்டைதிருவாரூா் ரயில்பாதையில், காலியாக உள்ள ரயில்வே கேட் கீப்பா்கள் பணியிடங்கள் 6 மாத காலத்துக்குள் நிரப்பப்படும்.மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறும் வகையில், நடைமேடைகளின் உயரம் அதிகரிக்கப்படும் என்றார்.

தற்போது நவீன முறையில், கணினி உதவியுடன் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, இவை நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், அனைத்து ரயில்பாதைகளும் (தண்டவாளங்களும்) இணையும் இடங்களில் அமைக்கப்பட்டு, சக்கரங்களின் இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டு கணினியில் காணும் வகையில் பதிவேற்றம் செய்யும்.அதில் இயக்கங்கள் குறித்த எச்சரிக்கை பதிவுகள் சமிக்ஞை மூலம் பெறப்படும். சக்கரத்தில் பழுதுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு, விபத்துகள் தடுக்கப்படும்.

               

 

N3

Leave A Reply

Your email address will not be published.