திருச்சியில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் எஸ்.கணேஷ் நியமித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளர் தொலைபேசி எண்ணில் 6381683806 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
