தம்பி “சிவா” விற்கு நிறைய அன்பு

0
D1

இன்று காலை, எங்கள் அலுவலகத்திற்கு ஆட்டோவில் பயணித்தேன்.ஓட்டுனர் தம்பி சிவா, “திரும்ப எப்ப ரிட்டர்ன் வருவீங்க க்கா?” உடனே வந்துருவீங்கன்னா,வெயிட் பண்ணி கூட்டிட்டு போகவா? என பேச்சுக் கொடுத்தார்.

ஈவ்னிங் ஆகும் ப்பா,என சொன்னதும் அப்ப 5 மணிக்கு மேல னா, நான் வந்து கூட்டிட்டு போறேன் ன்றவர் தான் திருச்சியில் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும், காலை 9 மணி வரை ஆட்டோ ஓட்டிட்டு காலேஜ் போவேன், திரும்ப சாயந்தரம் காலேஜ் ல இருந்து வந்து ஆட்டோ ஓட்டுவேன்.

அம்மா,அப்பா, எந்த வசதியும் இல்லாத கிராமத்துல இருக்காங்க, கூட பிறந்தது 5 அக்கா, நான் ஒரு பையன், படிப்புக்காக திருச்சில தங்கிருக்கேன், படிப்புச் செலவுக்காக காலை லயும்,சாயந்தரமும் வாடகை ஆட்டோ ஓட்டுறேன் க்கா,ஆட்டோ வேணும் னா சொல்லுங்க ” க்கா என்ற போது கண் கலங்கி விட்டது. ( bus day கொண்டாடும் மாணவர்களும் நினைவில் வந்தார்கள்.

D2

நானும் இப்படித் தான் கஷ்டமான சூழலில் சிரமப் பட்டு படித்தேன், படிக்கிற வரை தான் கஷ்டம்…படிச்சு முடிச்சுட்டா நல்லா வந்துடுவோம் என சொல்ல நினைத்து, சொல்லவில்லை…பரவாயில்லை… அடுத்த பயணத்தில் சொல்லிக் கொள்ளலாம்.

N2

தன் குடும்ப சூழலை,தன் படிப்பின் மூலம் உயர்த்த எண்ணி, பெற்றோரை வருத்தாமல், தானே ஆட்டோ ஓட்டி உழைத்து படிக்கிற அந்த தம்பியோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.”உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கணும் தம்பி ” எனக் கேட்ட போது, முகத்தில் ஆச்சர்யம் காட்டி, பிறகு மகிழ்வாக சிரித்தார்.

இப்படியான மனிதர்களை சந்திக்கும் போது, இப்போதெல்லாம் உடனடியாக அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்…

தம்பி “சிவா” விற்கு….நிறைய அன்பு…

சுமதி ஸ்ரீ

 

N3

Leave A Reply

Your email address will not be published.