குத்துச்சண்டைப் போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

0
1

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில், ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகள் பங்கேற்று விளையாடின.

இதில் 4 தங்கம், தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலிடத்தை பிடித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

முறையே 2 முதல் 4 வரையிலான இடங்களை புதுக்கோட்டை ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி, மாமன்னா் கல்லூரி, தஞ்சாவூா் பாரத் கல்லூரி ஆகியவை பெற்றன.

3

Leave A Reply

Your email address will not be published.