நாளை (21ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தம் மற்றும் மின்நிறுத்தம்

0
full

திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்ட மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் உள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3  ஆகியவற்றின் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையம் இவைகளுக்கான துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ukr

அதனால் சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட விறகுபேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜிநகர், அரியமங்கலம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரெயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தநகர், ஜே.கே.நகர், மேலகல் கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்பிரமணியபுரம், விமானநிலையப்பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவாணி முத்துநகர், அண்ணப்பநகர், கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமா நகர், சிவாநகர், ரெயின்போநகர், எடமலைப் பட்டிபுதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது அத்துடன் மின்விநியோமும் இருக்காது  என திருச்சி மாவட்ட ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.