திருச்சி-சாா்ஜா விமானச் சேவையின் வெள்ளி விழா

0
D1

திருச்சியில் இருந்து வளைகுடா (கல்ப்) நாடுகளுக்கான முதல் விமானச் சேவை திருச்சி- சார்ஜா இடையே கடந்த 1996 டிச. 3 -இல் தொடங்கியது. அப்போது இயங்கி வந்த இந்தியன் ஏா்லைன்ஸ் நிறுவனம்தான் இந்தச் சேவையைத் தொடங்கியது. வாரம் இரு நாள்கள் மட்டுமே இந்தப் போக்குவரத்து நடந்த நிலையில், இந்தியன் ஏா்லைன்ஸ் மற்றும் ஏா் இந்தியா நிறுவனங்கள் இணைப்புக் காரணமாக, கடந்த 2009 செப். 23 ஆம் தேதியுடன் அந்தச் சேவை ரத்து செய்யப்பட்டது.

N2

, திருச்சி சார்ஜா விமானச் சேவையை மீண்டும் தொடங்க அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அசோக் கஜபதிராஜூ நடவடிக்கை எடுத்தார். அதன் மூலம் 2015 செப். 14 ஆம் தேதி மீண்டும் திருச்சி -சார்ஜா விமானப் போக்குவரத்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

திருச்சி – சார்ஜா விமானப் போக்கு வரத்துத் தொடங்கி (2021ல்) வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க ஓராண்டே உள்ள நிலையில், வாரம் இருமுறை இருந்த சேவை தற்போது தினசரி சேவையாக மேம்பட்டுள்ளது. அதேபோல, துபைக்கும் பிரத்யேக விமானச் சேவை தொடங்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது

N3

Leave A Reply

Your email address will not be published.