திருச்சியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது !

திருச்சியில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது !
திருச்சி மாநகரம் பொன்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னேரிபுரம், எல்லை காளியம்மன் கோயில் அருகில் உள்ள ரூபி செல்வம் டிபன் சென்டர் முன்பு கடந்த 27.11.2019-ந் தேதி மாலை 18.30 மணியளவில் நின்று கொண்டிருந்த (1) அலெக்சாண்டர் சாம்சன் வயது 25/19 த.பெ. குழந்தை ஏசுராஜ், No.1/4 – F Type இரயில்வே காலனி, பொன்மலை அஞ்சல் அலுவலகம் அருகில், பொன்மலை மற்றும் (2) பிராங்கிளின் ஜோசப் ராஜ் வயது 24/19, த.பெ. அருள்சாமி, No. 19/15-கீழ உடையார் தெரு, பொன்மலைப்பட்டி, திருச்சி ஆகியோர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வாதியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 850 பணத்தை பறித்து வாதியை கொலை மிரட்டல் விடுத்ததாக மேற்படி முகமது பயாஸ் வயது 52/19, த.பெ. ஹனிபா, No.24-TSN அவன்யூ, II-Phase கே. கே. நகர், திருச்சி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய குற்ற எண் 399/19, U/S 392 r/w 397 IPC 506 (ii) IPC-யின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இவ்வழக்கினை பொன்மலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் புலன் விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் (1) அலெக்ஸ்சாண்டர் சாம்சன் (2) பிராங்கிளின் ஜோசப் ராஜ் ஆகியோர்களை கடந்த 27.11.2019-ந் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் மேற்படி (1) அலெக்ஸ்சாண்டர் சாம்சன் (2) பிராங்கிளின் ஜோசப் ராஜ் ஆகியோர்கள் மீது திருச்சி மாநகரம் அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கும், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கத்தியை காட்டி பணம் பறித்ததாக மூன்று வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் கத்தியை காட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
எனவே மேற்படி எதிரிகள் (1) அலெக்ஸ்சாண்டர் சாம்சன் (2) பிராங்கிளின் ஜோசப் ராஜ் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரியவருவதாலும் அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி மேற்படி (1) அலெக்ஸ்சாண்டர் சாம்சன் (2) பிராங்கிளின் ஜோசப் ராஜ் ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இன்று 20.12.2019-ந் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
