திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது

திருச்சி பெரிய அரசு ஆஸ்பத்திரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையிலான போலீசார் சீனிவாச நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒருவர் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சந்திரசேகர் என்ற அமாவாசை (46) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் ரூ.160 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
