செவ்வாழைப்பழம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்-ஐசிஏஆர் இயக்குனர்

0
Business trichy

செவ்வாழைப் பழம் தொடா்பாக இணைய வெளியில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருச்சிய தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா தெரிவித்துள்ளார்.

Rashinee album

மேலும் அவர் கூறியது, இணையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது செவ்வாழைதான். ஆனால், அதில் சாயம் ஏதும் பூசப்படவில்லை. சிவப்புச் சாயம் பூசியிருந்தால் கழுவிய தண்ணீா் சிவப்பாக மாறியிருக்க வேண்டும். செவ்வாழை முதிர்ந்து பழுக்கும்போது ஆந்தோசயனின் (சிவப்பு நிறமி) தோலின் மேலடுக்கில் மட்டும்தான் உற்பத்தியாகிறது. இவ்வாறு சுரண்டி எடுக்கும்போது உட்புறத்திலுள்ள மஞ்சள் திசுக்கள் வெளிப்படும். மேலும் சோப்பிலுள்ள சோடியமோ அல்லது பொட்டாசியமோ சிவப்பு நிற ஆந்தோசயனின் நிறமியுடன் வினைபுரிந்து அதை வெளுக்கச் செய்து விடும். இதனால் பழுக்காதவற்றில் இளம்பச்சை நிறமும் பழுத்திருந்தால் மஞ்சள் நிறமும் வெளிப்படுகிறது. எனவே, இணையத்தில் வரும் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதனால் மக்கள் குழப்பம் அடைவதுடன் விவசாயிகளும் பெரும் பாதிபக்கப்படுகின்றனர் என்றார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.