அவ்வையார் விருது

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையில் உலக மகளிர் தின விழா ஆண்டு தோறும் மார்ச் 8ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2012 முதல் மகளிர் தின விழா கொண்டாட்டத்தின்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். எனவே தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட சமூக நலன், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம் பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணியாற்றுபவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர், தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 27.12.2019 மாலை 5.00 மணிக்குள்
மேலும் விபரங்கள் பெற வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருச்சிராப்பள்ளி -1
தொலைபேசி எண்: 0431-2413796
