திருச்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் புகார் செய்யலாம் !

திருச்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் புகார் செய்யலாம் !
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை 18.12.2019 முதல் திறக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொதுமக்களின் புகார் மனு மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 18.12.2019 திறக்கப்பட்டது.
முதல் தளத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் 8 மணி நேரம் வீதம், 2 பேர் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டியிருந்தால் ஊரக உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண்: 0431-2410085 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
