திருச்சியில் மோட்டார் சைக்கில் திருடிய வாலிபர் கைது

திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த ராம்கி திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணாததால் அவர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கே.கள்ளிக்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டு ராம்கியிடம் ஒப்படைத்தனர்.
