திருச்சியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தச்சுத் தொழிலாளி கைது

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று குடிபோதையில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை அழைத்துச்சென்று தனது வீட்டினுள் வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயிடம் விஷயத்தை கூற அவர் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சங்கரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
