திருச்சியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு

0
Business trichy

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி அனைத்து சமுதாய வியாபாரிகள் ஒருங்கிணைந்து பாலக்கரை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்திருக்கிறோம். இந்தியா மதசார்பற்ற நாடு. எனவே, இங்கு பாகுபாடுக்கே இடமில்லை. தங்களது ஒருநாள் வர்த்தகம் பாதிப்படைந்தாலும் பரவாயில்லை எனக்கருதி இரும்பு வியாபாரிகள், டயர் விற்பனையாளர்கள், பழைய மோட்டார், கார் உதிரிபாகங்கள் வியாபாரிகள், டீக்கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைப்பு காரணமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பபெற வேண்டும் என்றனர்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.