திருச்சியில் குடிசை மாற்று வாரியம் முன்பு பொதுமக்கள் தர்ணா

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தில் ஏற்கனவே இருந்த குடிசை வீடுகள்இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கான பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து நேற்றுமாலை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
