திருச்சியில் ஓடும் பஸ்சில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது

திருச்சி பொன்னகரைச் சேர்ந்த வெங்கட கணபதி பிரவீன்(22) பஸ்சில் தனது மடிக்கணினியுடன் பயணம் செய்தார். அப்போது அவரின் மடிக்கணினியை திருடிய நபர் கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே பஸ்சை விட்டு இறங்கி தப்பி ஓடினார். அப்போது அவரை விரட்டிச்சென்று பிடித்த பிரவீன் மடிக்கணினியை கைப்பற்றிய பின் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் அவர் ராம்ஜிநகரைச் சேர்ந்த மோதி(43) என்பது தெரியவந்தது.
