திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு வீடுகளில் கருப்புக்கொட்டி கட்டி போராட்டம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்தொகுதி அந்தநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட பழுர் ஊராட்சி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி இல்லை, ரோடு வசதி இல்லை
,தெருவிளக்கு இல்லை, இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்செல்ல பொதுபாதை இல்லை. பொதுக்கழிவறை கட்டியும இதுவரை திறக்கவில்லை. இதுகுறித்து மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராஜலட்சுமி நகர் பகுதி மக்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.
