திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண்குழந்தை

0
1 full

திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, சென்னை-10, கிறிஸ்த் பெயித் சிறப்பு தத்துவள மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆண்குழந்தை.அதர்வா தொடர்பான  விவரங்கள்

 படத்தில் காணும்  ஆண் குழந்தை, திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மகாத்மாகாந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையின் தொட்டில் குழந்தை திட்டத்தில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தைக்கு  அதர்வா (பிறந்த தேதி-18.09.2019) என பெயரிப்பட்டு, 26.11.2019  அன்று திருச்சி, மாவட்ட சமூக நல அலுவலரின் உத்தரவின் அடிப்படையில், திருச்சி குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்காலிக வைப்பு ஆணை (TEMPORARY CUSTODY ORDER) பெறப்பட்டு, சென்னை-10, கிறிஸ்த் பெயித் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க  வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வறிவிப்பினை காண்பவர்கள் இக்குழந்தையை பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இருபத்தொரு நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி, குழந்தைகள் நலக் குழு அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று (Legally Free for Adoption) வழங்கப்படும் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு. தெரிவித்துள்ளார்.

2 full

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

 

தலைவர்/உறுப்பினர்கள்

குழந்தைகள் நலக்குழு,

மெக்டொனால்டுரோடு,

கலையரங்கம் திருமணமண்டபம் மாடியில்,

கண்டோன்மெண்ட்,

திருச்சிராப்பள்ளி.

தொ.எண்: 04312413819/9629929412.

 

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்டகுழந்தைபாதுகாப்புஅலகு,

N.E.1>மெக்டொனால்டுரோடு,

கலையரங்கம் திருமணமண்டபம்  மாடியில்,

கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி.

தொ.எண்:0431-2413055/9047283819

மின்னஞ்சல்:- dcpstrichy1@gmail.com

om

3 half

Leave A Reply

Your email address will not be published.