திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே மக்கள் பேனர் வைத்து தேர்தல் புறக்கணிப்பு

0
full

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வலையூர் ஊராட்சி, வலையூர், 94 கரியமாணிக்கம், பாலையூர் ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள கிராம முக்கியஸ்தர்கள் கூட்டம் போட்டு உள்ளாட்சி பதவிகளை அனைத்தையும் ரூ. 28 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், சிலர் தங்களது சுயலாபத்திற்காக கமிஷன் வாங்கிக்கொண்டு ஏலம் விட்டு கோயில் கட்டுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.  எனவே நாங்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அப்பகுதி மக்கள் பேனர் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.