திருச்சியில் வணிகர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே ஆன்லைன் வணிகத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினரின் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமை வகித்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், மற்றும் பேரமைப்பின் கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான வணிகர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் விதமாக அந்நிய நேரடி முதலீட்டை திணித்து மறைமுக பொருளாதார தாக்குதலை ஊக்குவித்து, வாழ்வாதார இழப்பு,வேலை இழப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
