திருச்சியில் பரபரப்பு என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

இலங்கை ஆலயங்களில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகளுக்கும் தமிழகத்தில் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் என்ஐஏ அதிகாரிகள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இன்ஜினியர் சர்புதீன் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன் சர்புதீனிடம் கொச்சியில் விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் சர்புதீன் வீட்டில் சோதனையிட்டு சர்புதீன் தம்பியிடம் இருந்து சிம்கார்டை கொண்டு சென்றனர்.
