திருச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

0
1 full

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்தும் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமை வகித்து பேசுகையில், இந்த மசோதாவுக்கு அதிமுக அரசு கூட்டணி தர்மத்திற்காகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் பாமகவும் ஆதரவு அளித்ததாக சொல்கிறார்கள். இந்த தர்மம் திமுக, காங்கிரசுக்கும் இருக்காதா என்ன? வங்கதேசம், பாகிஸ்தான் முஸ்லீம்கள், இலங்கை தமிழர்கள் அனைவரும் மக்கள் தான். அவர்களையும் விட்டுவிட முடியாது. இந்த சட்டம் பாகுபாடு கொண்ட சட்டம்.

அதிமுக, பாமகவும் இலங்கை தமிழர்களின் வாக்குகளை வாங்கி அரசியல் செய்துவிட்டு அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.  திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் குடியுரிமை விவகாரத்தில் பிரிவினை பேசுவதாக மோடி கூறுகிறார்.  நாங்கள் பிரிவினை பற்றி பேசவில்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே கூறுகிறோம் என பேசினார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.