திருச்சியில் கல்லூரி மாணவர் விபத்தில் பலி

தூத்துக்குடியை சேர்ந்த வேல்குமார் (20) திருச்சியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது இரு நண்பர்களுடன் கல்லூரிக்கு செல்லும்போது வெஸ்ட்ரி ரவுண்டானா அருகே வந்தபோது கார் மீது மோதியதில் வேல்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நண்பர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
