திருச்சியில் உள்ளாட்சிதேர்தல் ஆலோசனை கூட்டம்

0
Business trichy

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு குறித்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் சிவராசு, எஸ்பி ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் லட்சுமி பேசுகையில்,  14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் பணியாற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், தேர்தல் நடத்தும் அலுவலர், கிராம ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மற்றும் அலுவலர்களுக்கும் வேட்புமனு பரிசீலனை குறித்த இடர்பாடுகள், வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, மாவட்டத்தின் பதட்டமான பகுதிகளை கண்டறிவது, வேட்புமனு வாபஸ் குறித்தும் பேசினார்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.