கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் கொண்டாடிய கிறிஸ்மஸ் விழா

0
Full Page

நேற்று தூய வளனார் கல்லூரி,விரிவாக்கத் துறை (shepherd) மற்றும் இளங்கனல் தொண்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அதாவது எளியோர் மகிழ உதவி செய்தாயா அதுதான் கிறிஸ்துமஸ் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி விராலிமலை, கல்குளத்துப்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமைவகித்தார். தாமஸ் அருட் சகோதரிகள் சபையின் அருட் சகோதரி சகாயம் அவர்கள் ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர். அற்புதசகாயராஜ் அவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்கினார்.

Half page

இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அந்தோணி ஜெய்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு puppet show (பொம்மலாட்டம்) நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்துராஜா அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வினை இளங்கனல் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் வளனார் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளியல் மாணவர்கள் ஒருங்கிணைத்தனார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.