17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு தா.பேட்டை அருகே  கண்டெடுப்பு

0
1 full

தா.பேட்டை அருகே பாப்பாபட்டியில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டின் சிற்பங்களில் ஒன்றில் படம் எடுத்து நெளியும் பாம்பை காட்சிப் படுத்துவதாகவும்,  மற்றொன்று 2 பாம்புகளின் இணைப்பை காட்டுவதாகவும் உள்ளது. பாம்புகளின் உடல் இணைப்பால் உருவான இரு வளையங்களில் மேலே லிங்க திருமேனியும், கீழ் வளையத்தில் மலர் பதக்கமும் சிற்பி செதுக்கியுள்ளார்.

இதை உருவாக்கியவர் பெயர் அய்யண்ணன் என சிற்பத்தின் கீழே உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.. 2  கால்கள் செதுக்கப்பட்ட நிலையில் உள்ள பெரும்பாறை கீழ் பகுதியை நன்றாக செதுக்கி தளத்தை சமன்படுத்தி 14 வரிகள் உள்ள தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தலைமலை இறைவனான மலைராயன் அருளால் பிள்ளை பேற்றுடன் சிறக்க வாழ்வார் என்று வாழ்த்தியுள்ளார்.. சஞ்சீவிராய பெருமாள் கோவிலாக தற்போது அறியப்படும் இக்கோவில் மலையின் உச்சியில் உள்ளது. இவ்வழியில் தான் அய்யண்ணன் கட்டியதாக கூறும் படிமண்டபம் உள்ளது. படிமண்டபத்தை உருவாக்கிய அய்யண்ணன் பாப்பாபட்டி கிராமத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என எண்ண  செய்கிறது. இக்கல்வெட்டின் 17-ம் நூற்றாண்டாக சேர்ந்த்தாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.