ஸ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்கா கோவிலுக்கு மங்களப் பொருள்கள் அளிப்பு

0
1 full

மார்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிருந்து திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி கோயிலுக்கு மங்களப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

வருடந்தோறும் மார்கழி மாத முதல் நாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, தனது சகோதரி அகிலாண்டேசுவரிக்கு பட்டுப்புடவை, தாலி, மஞ்சள், குங்குமம், வளையல், அரிசி மற்றும் திருப்பாவாடை நிகழ்வுக்குத் தேவையான அனைத்துப்பொருள்களும் கொடுப்பதாக ஐதீகம்.

இதன்படி இந்த ஆண்டுக்கான பொருள்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் .ஜெயராமன் தலைமையில், உதவி ஆணையா் கந்தசாமி, கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், அறங்காவலா்கள் டாக்டா் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோயில் பணியாளா்கள் மங்களப் பொருள்களை ஊா்வலமாக கொண்டு வந்தனா்.

2 full

அனைவரையும் திருவானைகோவில் உதவிஆணையா் மாரியப்பன் நாலுகால் மண்டபம் முன்பு மாலை அணிவித்து வரவேற்றார். பின்னா் மங்களப் பொருள்கள் சுவாமி,  அம்மன் சன்னதிகளில் வலம் வந்தது. இதைத் தொடா்ந்து திருவானைக்கா கோயில் உதவி ஆணையா் மாரியப்பனிடம் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் ஜெயராமன் வழங்கினார். இந்நிகழ்வில், அமைச்சா் வளா்மதி பங்கேற்றார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.