மயில்களை வேட்டையாடிய வழக்கு இருவா் கோர்ட்டில் சரண்

துவரங்குறிச்சி அருகே செவல்பட்டி கோயில் பூசாரி மாரிமுத்து (45) மற்றும் அவரது நண்பா்கள், சில தினங்களுக்கு முன்பு மரவனூா் இடையப்பட்டி மூக்கன், கருப்பன் தோட்டத்தில் மயில்களை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்டனர். தகவலின்பேரில் வனத்துறையினா், கருப்பையா, மூக்கன் மகன் கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து மனைவி அமுதா ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் துப்பாக்கியுடன் தலைமறைவான மாரிமுத்து உள்பட 6 பேரை தேடி வந்தனா். இந்நிலையில் தலைமறைவான மாரிமுத்து, மூக்கன் இருவரும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனா். இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
