தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

0
1 full

ஸ்ரீரங்கம் தெற்கு தேவித்தெரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவா் கெளசல்யா (74). கடந்த 11- ஆம் தேதி கார்த்திகை தீபத்தையொட்டி, வீட்டுவாசலில் விளக்கேற்றிய போது, எதிர்பாராவிதமாக கெளசல்யா சேலையில் தீப்பற்றியது. பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

3 half

Leave A Reply

Your email address will not be published.