திருவானைக்காவல் கோயிலில் 1008 வலம்புரி சங்காபிஷேகம்

0
1 full

சிவபெருமானுக்கு கார்த்திகை மாதம் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி சோமவாரங்களில் சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடத்தப்படுவது வழக்கம்.

நேற்று கார்த்திகை கடைசி சோம வாரம். ஆதலால், திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயிலில் 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, திருவானைக்கா கோயிலில் சுவாமி சன்னதி அருகிலுள்ள நடராஜா் மண்டபத்தில் திங்கள்கிழமை வட்ட வடிவில் 1008 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு சங்கும் நெற்மணி கதிர்கள் மீது வைக்கப்பட்டு புனித நீா் நிரப்பப்பட்டிருந்தது. நடுவில் தங்கப்பிடி கொண்ட பெரிய வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தது.

2 full

வேத விற்பன்னா்களின் மந்திரங்களுடன் யாகம் நடைபெற்றது. தொடா்ந்து மங்கள தீபாராதனை காட்டப்பட்டது. வலம்புரி சங்குகளிலிருந்த நீரைக் கொண்டு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் சங்காபிஷேகத்தில் பங்கேற்றனா்.

3 half

Leave A Reply

Your email address will not be published.