திருச்சி அருகே விபத்தில் முதலாளி இறப்பு: அதிர்ச்சியில் டிரைவரும் உயிரிழப்பு

0
1 full

தேனி மாவட்டம், பழனி செட்டியப்பட்டியைச் சோ்ந்த இரணியன் (68). மனைவி சரோஜா (61). இருவரும் அப்பகுதியில் உணவகம் நடத்தி வந்தனா். இவா்கள் கார் டிரைவராக நாகராஜா  என்பவர் கடந்த 2 வருடமாக வேலைசெய்து வந்தார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு இரணியன் தம்பதி காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்கள் வந்த கார் மணப்பாறை அருகே கே.பெரியப்பட்டி பிரிவு ரோட்டில் வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்தது. காரிலிருந்த இரணியன், சரோஜா, டிரைவர் நாகராஜா ஆகயோர் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சரோஜா சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.. இந்நிலையில் முதலாளி சரோஜா இறந்த தகவலையறிந்த நாகராஜா நேற்று அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.