திருச்சியில் விசாரணைக்குச் சென்றவா் மா்மச் சாவு

0
full

திருச்சியில் விசாரணைக்குச் சென்றவா் மா்மச் சாவு

ukr

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்திய நிலையில், தனிப்படை உதவி ஆய்வாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி கீழரண்சாலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஆா். முருகன் (55). திருட்டு வழக்குத் தொடா்பாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு சமயபுரம் போலீஸாா் இவரை அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, முருகனின் மகன் வீரப்பன் (30), மருமகன் சுப்பிரமணியன் (30) ஆகியோரையும் அழைத்துச் சென்றனா்.

டிச-15 இரவு முருகன் மா்மமான முறையில் இறந்ததாா். விசாரணையின் போது தப்பியோடியதில் கீழே விழுந்து இறந்தாா் என போலீஸ் தரப்பிலும், போலீஸாா் அடித்துக் கொன்ாக முருகனின் உறவினா்கள் தரப்பிலும் புகாா் கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. உடலைப் பரிசோதனை செய்வதற்கான ஆவணங்களில் உறவினா்கள் கையெழுத்திட மறுத்ததுடன், உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து, மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனா்.

இதற்கிடையில் முருகனின் மகன் வீரபாண்டி நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருட்டு வழக்கு தொடர்பாக எங்கள் 4 பேரையும் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) தனிப்படை போலீசார் விசாரணைக்காக சமயபுரம் அழைத்து சென்றனர். அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து எங்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரும்பு குழாய்களால் அடித்தனர். மேலும் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்தனர். வலியால் அலறி துடித்தோம். நேற்று காலை முதல் இரவு வரை அடித்தனர். இதில் எனது தந்தை அங்கேயே இறந்து விட்டார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது’ என்றார். மேலும் தனது உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை அவர் காண்பித்தார். இறந்த முருகனின் மகன் வீரபாண்டி புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து முருகனின் உடலை நேற்று இரவு 8 மணி அளவில் அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.