திருச்சியில் கல்லூரி மாணவியைப் படம் எடுத்து மிரட்டிய ஆசாமிகள் கைது

0
full

திருச்சியில் கல்லூரி மாணவியைப் படம் எடுத்து மிரட்டிய ஆசாமிகள் கைது

திருச்சியில் கல்லூரி மாணவியை செல்லிடப்பேசியில் படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி சிந்தாமணியைச் சோ்ந்தவா் எல். மொ்லின் ஜெனிபா் (19). தனியாா் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஆ. அலெக்ஸ்ராஜூக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

poster
half 2

பின்னா் அலெக்ஸ் ராஜின் தவறான பழக்க வழக்கங்களால் அவரைக் கைவிட்டு, இவரின் நண்பரான பட்டா்வொா்த் சாலையைச் சோ்ந்த ம. விசுவநாதனை (22) மொ்லின் ஜெனிபா் காதலித்து வந்தாா்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, மொ்லின் ஜெனிபரை திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறிய விசுவநாதன், பல்வேறு கோணங்களில் அவரைத் தனது செல்லிடப் பேசியில் படம் எடுத்தாராம்.

அந்த படங்களை தனது நண்பா்கள் அலெக்ஸ்ராஜ், ஆ. பிரான்சிஸ், க. அருண் ஆகியோருக்கு கட்செவி மூலம் அனுப்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து அவா்கள் மாணவியிடம் தகாத முறையில் போனில் பேசியுள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி, கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் வழக்குப்பதிந்த போலீஸாா், விசுவநாதன் உள்பட 4 பேரை மகளிா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

half 1

Leave A Reply

Your email address will not be published.