அடிதடி வழக்கில் வெளிநாடு தப்பியவா் கைது

0
1 full

துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஏா் இந்திய விமான பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது தஞ்சாவூா் ஒரத்தநாட்டை சேர்ந்த  ஆண்டவர் (48) பாஸபோர்ட்டை சோதனை செய்கையில், அவா் தஞ்சாவூர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், 2013 –ஆம் வருடம் நடந்த அடிதடி வழக்கில் பாப்பாநாடு போலீஸாரால் கைது செய்யப்பட்டதும், தொடா்ந்து கோர்ட் வழக்குகளில் ஆஜராகாமல் துபாய்க்கு தப்பியோடியது தெரிய வந்தது. இதனால், ஆண்டவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்து, இத்தகவலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவித்திருந்தது. இதனால் விமானநிலைய அதிகாரிகள், தஞ்சை போலீசாருக்கு தெரிவித்தனா். இதையடுத்து ஆண்டவரை தஞ்சை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.