
செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்படு விரிவாக்கத் துறை புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஆர்.சி பள்ளியில் மரக்கன்று நடும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு செப்பர்டு விரிவாக்கத் துறையின் இயக்குனர் அருட்திரு பெர்க்மான்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரங்களின் பயன்களை பற்றி விளக்கி கூறினார் இதன்பின்பு பள்ளி மாணாக்கர்களுக்கு மரக்கன்றை வழங்கியும் முதல் மரக்கன்றை பள்ளி வளாகத்திலும் நட்டு வைத்தார் அருட்தந்தை டேவிட் ராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்

கொய்யா வேம்பு புங்கை மற்றும் செம்மரக் கன்றுகள் ஆகிய நூற்றுக்கும் மேற்பட்ட கன்றுகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
மேலும் பள்ளி ஆசிரியைகள் மற்றும் செப்பர்டு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்துராஜா மற்றும் ஜெயசீலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்
செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கணிதத் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
