விடுதியிலிருந்து சிறுமி மாயம்

0
Business trichy

கரூர் தோகைமலை நங்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் தங்கப்பொண்ணு (16). இவர் கடந்த நவம்பர் 27ம் தேதி திருச்சி ரயில்வே ஜங்ஷனில் சுற்றித் திரிந்தார். திருச்சி சைல்டு அமைப்பினர் அவரை மீட்டு குழந்தைகள் ஆணையர் முன் ஆஜர்படுத்தினர். மீட்கப்பட்ட அப்பெண் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள டிஎம்எஸ்எஸ்எஸ் சாந்தோம் விடுதி மையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டார். திடீரென்று தங்கப்பொண்ணு அங்கிருந்து மாயமானார். இதுகுறித்து மைய கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகர் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சிறுமியை விசாரித்து வருகின்றனர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.