ராகுல் மன்னிப்பு கேட்க தேவையில்லை: திருநாவுக்கரசர் சொல்கிறார்

திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள், கற்பழிப்பு குறித்து ராகுல் கூறித்து கருத்துக்கு தவறான பொருள் கற்பிக்கப்படுகிறது. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு மன்னிப்பு கேள் என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. ராகுல் மன்னிப்புகேட்க வேண்டியதில்லை.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 300 ஏக்கர் நிலம் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தேன். மாற்று நிலம் தருவது குறித்து தமிழக அரசின் உத்திரவாதம் பெற்று பணியை தொடங்குவது குறித்து பேசியுள்ளேன். இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேசவுள்ளேன் என்றார்.
