திருவெறும்பூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பட்டியல் குளறுபடி

திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் திருவெறும்பூர் 2வது வார்டுக்கு பெண் வேட்பாளர் நிறுத்த வேண்டும். ஆனால் குவளக்குடியை சேர்ந்த சிவக்குமார் பெயரை வெளியிட்டுள்ளனர். அதேபோல் 12வது வார்டுக்கு பெண் வேட்பாளர் நிறுத்த வேண்டும். ஆனால் திருமதி ராவணன் என பெயரிட்டுள்ளனர். இவ்வாறு குழப்பமான பட்டியல் வெளியிட்டுள்ளதால் அதிமுக கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
