திருச்சி காவேரி கல்லூரியின் மூலம் மனித உரிமை தினம் அனுசரிப்பு

திருச்சி காவேரி கல்லூரியின் மூலம் மனித உரிமை தினம் அனுசரிப்பு
டிச- 10 அன்று காவேரி மகளிர் கல்லூரியின் சமூகப்பணி துறை மாணவிகள் அமிட்டி கிளப் சார்பாக மனித உரிமை தினத்தை அனுசரிக்கும் விதமாக அன்பாலயத்தின் உள்ள மனநலம் குன்றியவர்களை அலங்கரித்து அவர்களுடன் உரையாடி, பல நிகழ்ச்சிகளை நடத்தினர். அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கியும், நடனமாட வைத்து உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பந்து எறிதல், எழுதுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் அவர்களது ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியையும் மாணவிகளையும் சமூகப்பணி துறை பேராசிரியர் அமிர்தமதி நடத்தினார்.
